சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், 6ந்தேதி முதல் மேலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த கோரி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராமன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தமிழகத்தில் கொரோனா 2வதுஅலை தீவிரமாக பரவி வருகிறது. அதை தடுக்கும் வகையில் முழு லாக்டவுடன் போடப்பட வேண்டும், மாநிலத்துக்குள் உள்ளேயும், வெளியேயும் போக்குவரத்து தடை செய்யப்படவேண்டும், கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும், கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனுமீது நாளை விசாரணை நடத்தப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.