சென்னை:
கொரோனா  ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்ட கல்லூரி இறுதி பருவ தேர்வுகளை செப்டம்பருக்குள் நடத்தி முடிக்க யுஜிசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில்,  தேர்வுகளை நடத்த தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சில மாநிலங்களில் ஒத்தி வைக்கப்பட்ட பள்ளித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,  மத்தியஅரசு, கொரோனாவால் சுமார் 3 மாதம் விணான நிலையில்,  தேர்வு மற்றும் கல்வியாண்டு துவங்குவது குறித்து பரிந்துரைகள் வழங்க, பேராசிரியர் குஹத் தலைமை யில் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கைதாக்கல் செய்ய உத்தரவிட்டது. அந்த குழுவினரும்,  ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தலாம் என முதலில் தெரிவித்தது. ஆனால், கொரோனா தொற்று குறையாததால், மீண்டும் திருத்தியமைக்கப்பட்ட அறிக்கை அளித்தது.
அதன்படி, க ல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தி முடிக்க, பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஜூலை 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அமல்படுத்த தமிழக அரசுக்கு தடை விதிக்க கோரியும், அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், கோவையைச் சேர்ந்த முதுகலை மாணவர் அம்ஜத் அலிகான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.