மதுரை: கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதிமன்றம், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
தமிழக முன்னாள் முதல்வர், கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ந்தேதி அன்று, தேசிய கல்வி வளர்ச்சி நாளாக தமிழகஅரசு கொண்டாடி வருகிறது. அன்றைய தினம் பள்ளிகளில் காமராஜரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தல், அவர் கல்விக்குச் செய்த தொண்டு குறித்து மாணவர்களிடையே சொற்பொழிவு நடத்துதல், கலை நிகழ்ச்சிகள் போன்றறை நடத்தப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இஅந்த நிலையில், காமராஜரின் பிறந்தநாளை தேசிய கல்வி நாளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.