மோடியிடம் ‘நற்சான்று’ பெற்றவருக்குச் சிக்கல் : அநியாய வட்டி கேட்டு மிரட்டியதாக போலீசார் வழக்கு..

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மோகன், சிகை  அலங்கார கலைஞர் ஆவார்.

ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மோகன், தன் கை காசில் இருந்து  5 லட்சம் ரூபாய் வரை செலவழித்து நிவாரண உதவிகள் செய்தார்.

இதனால் பிரதமர் மோடி, தனது ‘மனதின் குரல்’( மான் கி பாத்) நிகழ்ச்சியில் மோகனை வெகுவாக புகழ்ந்தார்.

இதனால் நெகிழ்ந்த மோகன் , தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக்கொண்டார்.

மோகனுக்கு இன்னொரு முகமும் உண்டு என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

மோகன் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். அவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த கெங்கைராஜன் என்பவர்  வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளார்.

கெங்கைராஜன் அசலுடன் வட்டிப்பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டதாகத் தெரிகிறது.

ஆனால், கூடுதல்  வட்டி கேட்டு மோகன். நான்கு பேரை அழைத்து வந்து, கெங்கைராஜனை  மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கெங்கைராஜன், அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

போலீசார், மோகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில்,அவர் தலைமறைவாகி விட்டார்.

பிரதமர் மோடியிடம் ‘நற்சான்று’ பெற்றவர், அநியாய வட்டி கேட்டதாக  போலீசாரால் தேடப்படும் சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-பா.பாரதி.