சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் சூரரைப் போற்று. அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை. வரும் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் சூரரைப் போற்று ரிலீசாக உள்ளது.


சூரரைப் போற்று பட பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளது. ஏகாதசி வரிகளில் செந்தில் கணேஷ் குரலில் பாடிய ’மண் உருண்ட பாடலில்..’ சாதி பிரச்சனையை தூண்டும் வரிகள் இடம்பெற்றிருப்பதாக தர்மபு ரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதுபற்றி விசாரிக்க் வேண்டும்.
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை வரும் 2022 வரை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என வழக்கில் கோரப் பட்டுள்ளது. வழக்கை விசாரித்த ஐகோர்ட், சூர்யாவின் சூரரைப் போற்று பாடலுக்கு எதிரான வழக்கை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சூர்யா சில தினங்களுக்கு முன் நீட் தேர்வை எதிர்த்து அறிக்கை வெளியிட் டார். இதையடுத்து அவர் மீது அரசியல் புள்ளிகளின் கவனம் திரும்பி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]