கவுகாத்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழாவில் ராகுல் காந்தி
” பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனங்களையும் தன்வசப்படுத்தி கொண்டுள்ளது. எனவே, தற்போது நாங்கள் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்”
எனப் பேசியிருந்தார்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் மோன்ஜித் சேத்தியா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக புகாரளித்தன் அடிப்படையில் ராகுல் காந்தி மீது பிஎன்எஸ் சட்டம் 152 மற்றும் 197(1) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.