மும்பை

தேர்தல் ஆணையம் அனுமதி இன்று பாஜகவுக்கு விளம்பரம் அமைத்த அமைச்சர் பியுஷ் கோயலின் சகோதரர் நிறுவனத்தின் மீது மும்பை காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிறுவனம் யுனைடெட் பாஸ்பரஸ் லிமிடட் என்னும் விதை விற்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரே இயக்குனர் பிரதீப் கோயல் ஆகும். இவர் மத்திய அமைச்சர் பியுஷ் கோயலில் சொந்த சகோதரர் என்பது குறிப்பிடததக்கது. இந்த நிறுவனத்தில் காங்கிரஸ் புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தியது.

அந்த சோதனையில் பாஜகவின் தேர்தல் விளம்பரம் குறித்த கையேடுகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்தன. உரம் மற்றும் விதைகள் விற்பனை செய்யும் இந்த நிறுவனம் தேர்தல் ஆணையம் அனுமதி இன்றி விளம்பரங்கள் அமைத்து அதை பதுக்கி வைத்தது இதன் மூலம் தெரிய வந்தது. ஆயினும் இந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அதை ஒட்டி மாகாரச்ஷ்டிர காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், “தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை இந்த நிறுவனத்தில் இருந்து ரூ. 6 கோடிக்கும் மேல் மதிப்புள்ள விளம்பர பொருட்களை கைப்பற்றியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. அதனால் நாங்கள் போராட்டம் நடத்தினோம் அதன் பிறகு இந்த நிறுவனத்தின் மீது சாதாரண வழக்கு பதியப்பட்டது.

இதை எதிர்த்து நான் தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் ஸ்வினி குமார், மற்றும் காவல்துறை ஆணையர் சஞய் பார்வே ஆகியோரிடம் முறையீடு செய்தேன். அவர்கள் தலையீட்டால் தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த குற்றம் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழும் பதிய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.