கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ‘காப்பான்’
செப்டம்பர் 20ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் உரிமையை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் ‘காப்பான்’ பட கதை தன்னுடையது என்று குரோம்பேட்டையை சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘சரவெடி’ என்ற தலைப்பில் கதை எழுதி இயக்குநர் கே.வி.ஆனந்திடம் தெரிவித்ததாகவும், அதனை ‘காப்பான்’ என்ற தலைப்பில் தற்போது கே.வி ஆனந்த் படமாக்கியுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை வருகின்ற செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.