சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசா, இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக காவல்துறை இந்துமதம் மீது மீது விமர்சனம் செய்பவர்களை கைது செய்ய மறுத்து வருகிறது ஆனால், மாற்று மதத்தினரை விமர்சித்தாலோ, அரசை விமர்சித்தாலோ உடனே கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. காவல்துறையினரின் ஒருதலைப்பட்சமாக நடவடிக்கைகள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  இந்து மதம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ராசாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்து இந்து அமைப்புகள், பாஜக சார்பில் பல இடங்களில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு காவல்துறை, எந்தவொரு வழக்கும் பதிவு செய்யாமல் உள்ளது.

இதையடுத்து, இந்துமதம் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், திமுக எம்.பி. ஆ.ராசா மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால், காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்ய  உத்தரவிட வேண்டும் எனவும் ஜெ.ஜெ. கட்சியின் நிறுவனர் ஜோசப் என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.