சென்னை

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்துள்ளது.

தமிழக  அமைச்சர் ஐ பெரியசாமி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக மீது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதான வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்து ள்ளது.