சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் நிராகரித்து உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் துணைமுதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், போடி நாயக்கனூர் தொகுதியில் அபோட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.
இதையடுதுது, ஓபிஎஸ் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி, வாக்காளர் மிலானி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில், தேர்தலுக்கான வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் சொத்துக்கள் கடன் விவரங்களை மறைத்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் கொடுத்த தகவல்கள் சரியாக இருந்ததால்தான், அவரது மனு ஏற்கப்பட்டது என கூறியது.
இந்த நிலையில், மிலானி தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை இன்று உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, வாக்காளர் நிலானி தொடர்ந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.