மோகன்லால் மீதான வழக்கு.. திடீரென வாபஸாகும் மர்மம்…
மலையாள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் இருந்து யானைத்தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது.
வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி, யானைத்தந்தம் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் மோகன்லால் மீது கேரள வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை பெரும்பாவூர் ஜுடிசியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மோகன்லால் மீதான யானைத் தந்த வழக்கை வாபஸ் பெற கேரள அரசு திடீரென முடிவு செய்துள்ளது.
இன்னும் சில தினங்களில் வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக பெரம்பாவூர் நீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கை வாபஸ் பெறுதற்கான காரணம் தெரியவில்லை.
– பா.பாரதி