நெல்லை: இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவரை தாக்கியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தலைவர் ஜைனுலாபுதீன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வேலூரைச் சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் (வயது 45). தற்போது சென்னை செங்குன்றத்தில் வசித்து வருகிறார். இவர், ஏகத்துல் பிரச்சார ஜமாத் என்ற அமைப்பைத் துவங்கி நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி இவர் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் பிரச்சாரக்கூட்டம் நடத்தினார்.
அப்போது தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த சிலர், இவரை பேக்கூடாது என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இவருக்கும் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஜவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள், செய்யது இப்ராஹிமை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் தமிழ்நாடு ஜவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஜைனுலாபுதீன் உட்பட 9 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இவர்களில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்