சென்னை:

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை ஊழியர்கள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று முகக்கவசங்களை இலவசமாக வழங்கி வருகிறது.

சென்னையில் செயல்பட்டு வரும் கேர் அன்டு வெல்ஃபேர் தன்னார்வ தொண்டு நிறுவனம்  சுமார் 5ஆயிரம் முகமூடிகளை,  சென்னையில் பணியாற்றி வரும் சுகாதாரத்துறை தொழிலாளர்கள், மாநகராட்சி குப்பை அள்ளும் தொழிலாளர்கள் போன்றோர்களுக்கு வழங்கி உள்ளது.

சென்னை மணலி பகுதி முதல் சென்னை சென்ட்ரல் வரை உள்ள பகுதிகளில் பணயாற்றி வரும் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு   இளைஞர் தொழில்முறை தொழிலாளர்களின் பராமரிப்பு மற்றும் நல தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் முகக்கவசம் வழங்கப்பட்டது.

[youtube-feed feed=1]