டில்லி,

நாளை காலை முதல் பெட்ரோல் பங்குகளில் கிரெடிட், டெபிட் கார்டுகள் ஏற்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்டு பரிவர்த்தனைக்கு பிராசஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் அறிவித்துள்ள தற்கு எதிர்ப்பு தெரிவித்து, கார்டுகளை வாங்க மாட்டோம் என்று பெட்ரோல் பங்கு உரியாளர்கள் அறிவித்து உள்ளனர்.

டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கு ஒரு விழுக்காடு கட்டணம் என வங்கிகள் அறிவித்துள்ளதைக் கண்டித்து நாளை முதல் கார்டுகளை ஏற்கப்போவதில்லை என பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்தியஅரசு பணமில்லா பரிவர்த்தனை ஊக்குவிக்கும் வகையில், பணப்புழக்கத்தை குறைத்து உள்ளது.

இதன் காரணமாக  பொதுமக்கள் அனைத்து தேவைகளுக்கும் கார்டுகளையே உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  பெட்ரோல், டீசல் நிரப்புபவர்கள் பெரும்பாலும் கார்டுகளையே பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஆனால்,  கார்டு பரிவர்த்தனைக்கு  முக்கால் சதவிகிதம் தள்ளுபடி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், இந்தச் சலுகை அறிவித்து, ஒருவாரம் ஆவதற்குள், நாளை முதல்  கார்டுகள் பரிவர்த்த னைக்கு  ஒரு விழுக்காடு பரிமாற்றக் கட்டணம் பெறப்படும் என பெட்ரோல் நிலையங்களுக்கு வங்கிகள் தெரிவித்துள்ளன.

அரசின் இந்த அறிவிப்புக்கு  அனைத்திந்திய பெட்ரோலிய முகவர் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக பெட்ரோல் உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்படுவதால்,  நாளை முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் பெறுவதில்லை என நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் இருந்தாலும்,  தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகள், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கலந்து பேசி இந்தச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.