திருவள்ளூர்

ன்று திருவள்ளூர் வீரராகவ பெருமால் கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது.

சென்னையை அடுத்த திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது.  இங்கு நடைபெறும்  தேரோஒட்ட உற்சவத்துக்கு ஊள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் பெருவாரியாக வருவது வழக்கமாகும்/

அவ்வகையில்திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது.  அப்போது திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவ பெருமாள் எழுந்தருளிய நிலையில் தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது.

இந்நிகழ்வில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரில் வலம் வந்த வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.  உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி பக்தர்கள் தஙக்ள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.