வாஷிங்டன்:

நிரவ் மோடி அமெரிக்காவில் தான் உள்ளார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை  அறிவித்துள்ளது.

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளையில் இருந்து ரூ.12,636 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்த  வைர வியாபாரி மற்றும் அவரது தொழில் கூட்டாளியும், உறவினருமான மெகுல் சோக்ஷி ஆகியோர் இந்தியாவில் இருந்து  தப்பி வெளிநாடு சென்று விட்டனர்.

இவர்களது மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை முகமைகள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.  நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை  சிபிஐ மேற்கொண்டு வருகிறது. நிரவ் மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் உள்ளதாக தகவல்கள்  வெளியாகின. இதையடுத்து,  அமெரிக்க வெளியுறவுத்துறை  அதிகாரியிடம் பிடிஐ செய்தி நிறுவனம் தொடர்பு கொண்டு நிரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுவது பற்றி கேட்டது.

இதற்கு பதிலளித்த அமெரிக்க வெளியுறவு அதிகாரி, “  நிரவ் மோடி அமெரிக்காவில் உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்படுவதை நாங்கள் அறிந்தோம். ஆனால்,  இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தார்.