டெல்லி: தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பு ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதாகவும், புற்றுநோய் பாதிப்பில்  சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும், நாடாளு மன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

நாடாளுமன்றத்தில் புற்றுநோய் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து, மத்தியஅரசு தரவுகளை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழ்நாடு பொது சுகாதார வரம்பைத் தாண்டியுள்ளது, ஒரே ஆண்டில் முதல் முறையாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய புற்றுநோய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக   மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.  அதில்,   தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புற்றுநோய் பாதிப்பு முதல்முறையாக ஓராண்டில் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1,00,097 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெண்கள் 53,542 பேர், ஆண்கள் 46,555 பேர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

புற்று நோய பாதிப்பு கடந்த 2020-ல் 68,750, 2021-ல் 76,968 ஆகவும், 2022-ல் 89,265 ஆகவும், 2023-ல் 92,816 ஆகவும், 2024-ல் 96,486 ஆகவும் இருந்த நிலையில் கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பாதிப்புகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக,  பெண்கள் அதிகமாக மார்பக புற்றுநோய், கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்கள், வாய்ப்புற்றுநோய், பெருங்குடல் மற்றும் வயிற்றுப் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகபட்சமாக சென்னையில் 8,505 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அடுத்து காஞ்சிபுரத்தில் 7,295 பேருக்கும் வேலூரில் 6,525 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறிதலையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் முதல்முறையாக சென்னை ஐஐடி-யில் புற்றுநோய் மரபணு தரவுத் தளம் அறிமுகம்!

[youtube-feed feed=1]