சென்னை: தேர்வர்களுக்கு முறையான இடம் ஒதுக்கீடு குளறுபடி  காரணமாக  ரத்து செய்யப்பட்ட குரூப் 2 மற்றும் குரூப் 2A முதன்மை தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும்  என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பிப்.8ந்தேதி நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால், தேர்வு நேரத்தில்  திடீரென  ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் பல தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டதால், தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அலட்சியச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை என இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தேர்வு கட்டுப்பாடு அதிகாரியை மாற்றி புதிய அதிகாரியை திமுக அரசு நியமனம் செய்தது. இதைத்தொடர்ந்து,  அடுத்த தேர்வுத் தேதி  பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், புதிய தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

“ரத்து செய்யப்பட்ட TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வரும் 28ஆம் தேதிக்குள் தேர்வர்களுக்கு பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என்று டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு எதிரொலி: டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிட மாற்றம்!

[youtube-feed feed=1]