விழுப்புரம்:  பருவமழை காலத்துக்கு முன்னதாகவே வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆர்வம் காட்டாததும்,  மழைநீர் வடிகால் பணிகளை முறையாக அதிகாரிகள்  மேற்கொள்ளாதே விழுப்புரம் மாவட்டத்தில், இதுவரை இல்லாத  அளவுக்கு வெள்ளப்பாதிப்பு ஏற்பட  காரணம் என விழுப்புரம் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஃபெஞ்சல் புயல் காரணமாகபெய்த கனமழையால், விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏரிகளில் இருந்து திறந்துவிடப் பட்ட வெள்ள நீர்காரணமாக பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன்,   சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல பகுதிகளில், ரயில் தண்டவாளங்கள் வெள்ள நீரினால் மூழ்கி உள்ள நிலையில், பல பகுதிகளில் தண்டவாளங்களிலும் மண்அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி, அரசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. இதுமட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால் வெளியேறிய தண்ணீரால் அப்பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 50 செ.மீட்டர் அளவிற்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது. விழுப்புரம் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியி ருப்பு பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம், இதுவரை காணத அளவுக்கு  இவ்வளவு பெரிய பாதிப்பை சந்திக்க காரணம், ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும்தான் என குற்றம் சாட்டும், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள்,  அதிகாரிகள்  முறையான பணிகள் செய்யாததே காரணம் என குற்றம் சாட்டி உள்ளனர்.  மழைநீர் செல்லும் கால்வாய்கள், வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றி முறையான தூர் வாராததே  காரணம் என கூறி உள்ளனர்.

மழை வெள்ளம் காரணமாக,  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டு உள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வாகனங்கள், மாற்றுவழியில்  இயக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  தேசிய நெடுஞ்சாலைகளில் ஒட்டி உள்ள ஏரிகள் நிரம்பியதால், அதிலுள்ள நீரை அதிகாரிகள் வெளியேற்றி யதால்,   ஏரிகளை சுறி உள்ள பகுதிகள், கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

அரசூர் பகுதியில் விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டி உயர்த்துக்கு தண்ணீர் செல்வதால் சாலை  துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.  இந்த போக்குவரத்து பாதிப்பு காரணமாக மாற்றுவழியில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வரக்கூடிய தென்மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டு வருகிறது. அதேப்போன்று, சென்னைக்கு செல்லக்கூடிய நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

விழுப்புரம் நகரில் உள்ள கெளதம் நகர், ராம் நகர், சுபஸ்ரீ நகர், சுதாகர் நகர், சேலைமஹால் பின்புறம் உள்ள விஐபி கார்டன், மகாராஜபுரம் தாமரைக்குளம், ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சுதாகர் நகர், ஆசாகுளம், சுமையா கார்டன், ஹைவேஸ் நகர், ராஜேஸ்வரி நகர், சரஸ்வதி அவென்யூ உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் வெள்ளம் சூழ்ந்துள்ளது

. வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது.  மேலும், மழை வெள்ளம் காரணமாக, . விழுப்புரம் மாவட்டம் முழுவதுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அத்திவாசிய தேவைக்கான குடிநீர் கிடைக் காமல் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .

முன்னதாக,  விழுப்புரத்தில் நீர் நிலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம்  25-ம் தேதி அனைத்து விவசாயிகள் சங்கம், சமூக ஆர்வலர் கூட்டமைப்பு மற்றும் நீர்நிலைப் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை ஆர்ப்பாட்டம்  நடத்தியது. ஆனால், இதுகுறித்து அதிகாரிகள் எந்தவொரு முழுமையான நடவடிக்கையும் எடுக்காததே இந்த பேரழிவுக்கு காரணம் என மக்கள் குமுறுகின்றனர்.

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரத்தில் ஏரிகள் உடைப்பு – தென்மாவட்ட ரயில்கள் பாதியிலே நிறுத்தம் – பொதுமக்கள் அவதி…