ஒட்டாவா, கனடா
இந்திய அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து நீக்கியவரை விருந்துக்கு அழைத்த கனடா பிரதமர் மீது தவறில்லை எனவும் இந்தியா மீதுதான் தவறு எனவும் கனடிய பத்திரிகை நேஷனல் போஸ்ட் குற்றம் சாட்டி உள்ளது.
தற்போது குடும்பத்துடன் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பிரிவினை வாதிகளுக்கு ஆதரவு அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அவர் பஞ்சாப் தீவிரவாதியான ஜஸ்பால் அத்வாலை விருந்துக்கு அழைத்தது தவறு எனவும் அரசு தரப்பில் கூறப்பட்டதாக அதிகாரமற்ற தகவல்கள் வெளியாகின. இதையொட்டி ஜஸ்பால் அத்வாலுக்கு அழைப்பு விடுத்ததை ட்ரூடோ ரத்து செய்தார். தற்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் கனடிய பத்திரிகை ஆன நேஷனல் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “பஞ்சாப் தீவிரவாதி எனக் கூறப்படும் ஜஸ்பால் அத்வால் மீது ஒரு இந்திய அரசியல் வாதியைக் கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதற்காக அவருக்கு வெளிநாடு செல்லும் விசாக்களும் ரத்து செய்யப்பட்டன.
ஆனால் தற்போது அவரை அந்த வழக்கில் இருந்து இந்திய அரசு விடுவித்துள்ளது. மேலும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்தும் விலக்கி உள்ளது. இதனால் கனடா பிரதமர் அவரை விருந்துக்கு அழைத்ததில் தவறு இல்லை. கனடா பிரதமரை இதற்காக எதிர்த்தது இந்தியாவின் தவறு” என குறிப்பிடப்பட்டுள்ளது