டொரோண்டா
கனடா பிரதம்ர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் ஆக்க பூர்வ உறவைத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.
இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது. கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை. மாறாகக் கனடாவில் உள்ள இந்தியத் தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார்.
இரு நாடுகளும் இதைத் தொடர்ந்து மாறிமாறி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியா கனடா நாட்டை சேர்ந்தோருக்கு விசா வழங்கப்படாது என அறிவித்துள்ளது. இந்தியா தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் 10-ந் தேதிக்குள் அதாவது ஒரு வாரத்தில் 41 தூதர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது.
நேற்று கனடாவின் ஒட்டாவா நகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இந்தியாவில் இருக்கும் கனடா தூதரக அதிகாரிகளைத் திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக வெளியான தகவல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதற்கு,
“கனடாவுக்கு இந்தியாவில் தூதரக அதிகாரிகள் இருப்பது முக்கியம். வெளிப்படையாக, நாங்கள் இப்போது இந்தியாவுடன் மிகவும் சவாலான நேரத்தைக் கடந்து வருகிறோம். ஆனால் நிலைமையை மோசமுடைய செய்ய நாங்கள் விரும்பவில்லை. இந்த கடினமான நேரத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான உறவைத் தொடர்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அந்த முக்கியமான பணியை நாங்கள் தொடர்ந்து செய்யப்போகிறோம்”
என்று பதில் அளித்துள்ளார்.
[youtube-feed feed=1]