தற்போதைய கனடப் பிரதமர், ஜஸ்டின் ட்ருடியா உலக மக்கள் அனைவருக்கும் பரிச்சயமானவராக உருவெடுத்து வருகின்றார்.
அவர் சில வருடங்களூக்கு முன்பு வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் அதற்கு காரணம். அந்த புகைப்படத்தில், அலுவலகத்தின் மேஜையின் மீது, கைகளை ஊன்றி, செய்வதற்கு கடினமான என்று கருதப் படும் “மயூராசன” யோகா செய்து, நிதானமாக போஸ் கொடுத்து இருந்தார். அந்தப் புகைப்படம் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் பகிரப்பட்டு உலா வருகிறது.
தற்பொழுது அவர் கனடாவின் பிரதமர் ஆனவுடன், அந்தப் படத்தை பலரும், அவரை ஆதரித்தும், புகழ்ந்தும் மீள்பதிவு செய்து வருகின்றனர்.
44 வயதிலும் ட்ருடியா உடற்கட்டுடன், யோகா திறனை வெளிப்படுத்துவது போல் ஒரு மேசை மீது போஸ் கொடுப்பதை மக்கள் ஆர்வமுடன் ரசித்து, பகிர்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், தமிழக முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவர், மற்ற முதலமைச்சர் வேட்பாளர்களின் உடல் தகுதி குறித்து ஏளனம் செய்து பேசியதை பலரும் கண்டித்திருந்ததையும், அந்த வேட்பாளரின் தந்தை ஏன் எல்லா பொதுக்கூட்டங்களிலும் அமர்ந்துக்கொண்டே பேசுகின்றார் என்றும் மக்கள் பதிலடி கொடுத்ததையும், கனடப் பிரதமருடன் ஒப்பிட்டால், அரசியல் தலைவர்கள் உடற்தகுதியோடு இருப்பதுடன் மக்களுக்கு உண்மையில் சேவையாற்றுபவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே பத்திரிக்கை.காமின் கருத்து. உங்கள் கருத்து என்ன என்பதைக் கீழே பதியவும்.