ஒட்டாவா
தாலிபான்களிடம் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டவர், தன் மனைவியை தாலிபான்கள் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.
வட அமெரிக்காவில் உள்ள கனடா நாட்டவர் ஜோஷுவா பாய்லி. இவர் தனது மனைவியான கைட்லயின், மற்றும் குழந்தையுடன் ஆஃப்கானிஸ்தானுக்கு சென்றார். அங்கு அவர் தாலிபன் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறிப்பாக எழைக்குழந்தைகளுக்கு உதவி செய்து வந்தார்.
ஒரு நாள் திடீரென அவர் குடும்பத்துடன் தாலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டர். கனட அரசு கடும் முயற்சி செய்தும் அவர்களை அடைத்து வைத்துள்ள இடத்தை கண்டறிய முடியவில்லை. கனடா அமெரிக்காவின் உதவியை நாடியது. அமெரிக்கா பாயிலியின் குடும்பத்தினரை தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்து பாகிஸ்தான் மூலம் பாய்லி, அவர் மனைவி, மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் ஆகிய்யொரை மீட்டது.
மீட்கப்பட்ட பாய்லி கனடாவுக்கு திரும்பி, அங்குள்ள ஒட்டாவா நகரில் தற்போது உள்ளார். தன் கடத்தல் பற்றி அவர், “எங்களை தாலிபான் தீவிரவாதிகள் கடத்திச் செல்லும்போது என் மனைவி கர்ப்பமாக இருந்தார். எங்களை ஒரு வனப்பகுதியில் அடைத்து வைத்திருந்தனர். நான் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டளைப்படி நடக்க முதலில் சம்மதிக்கவில்லை. அதனால் கோபமடைந்து என் மனைவியை என் முன்னாலேயே பலாத்காரம் செய்தனர். எனக்கு அப்போது பிறந்த குழந்தையையும் கைக்குழந்தை எனவும் பாராமல் கொன்ற் விட்டனர்.
பிறகு எங்கள் இருவரையும் ஒன்றாக அடைத்து வைத்தனர். அங்கு எங்களுக்கு மேலும் மூன்று குழந்தைகள் பிறந்தன. எங்களை சிறிதும் ஈவு இரக்கமின்றி தாலிபன் தீவிர வாதிகள் கடுமையாக சித்திரவதை செய்தனர். என் குழந்தைகளின் குழந்தைப்பருவம் முழுவதுமாக அவர்களால் பாழாகி உள்ளது. தற்போது மீட்கப்பட்டுள்ள நாங்கள் இனி எங்கள் குழந்தைகளுக்காக புது வாழ்வை துவங்க உள்ளோம்” என தெரிவித்தார்.
மீட்ட்கப்பட்ட பாய்லிக்கு அவர் விடுதலையால் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்த கனடா அரசு அவர் புது வாழ்வு துவங்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.