சென்னை: பட்ஜெட்டில வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்புகளை தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பிய  பிரேமலதா,  தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வாய்ப்பு வந்தால் நல்லது என்றார்.

 தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்  விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈஷா நிகழ்ச்சியில், முன்னாள் அதிமுக அமைச்சர் வேலுமணியுடன் பங்கேற்றது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் பட்ஜெட் குறித்தும் கருத்து கேட்டனர்.

இதற்கு பதில் கூறியவர்,   பட்ஜெட்டில் முத்தான 30 அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட்டை முழுமையாக படித்து விட்டு, பதில் சொல்கிறேன் என்றார். பட்ஜெட்டில வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்புகள், தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில்,   எல்லா அறிவிப்புகளையும், அமல்படுத்த முடியுமா? தேர்தல் முடிந்து புதிய அரசு அமைத்த பின் அமல்படுத்த முடியுமா? என்ற கேள்விகள் உள்ளன.

தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் நல்லது நடக்கின்ற, ஒரு பட்ஜெட்டை செயல்படுத்தும், அரசாக இருக்க வேண்டும் என்றார்.

எந்த கட்சியுடன் கூட்டணி என்ற கேள்விக்கு, தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற வாய்ப்பு வந்தால் நல்லது. அது ஒரு நல்ல மாற்றமாக இருக்கும் என்றவர்,   மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் எஜமானார்கள். தேர்தல் முடிவுகள் வரட்டும், பார்க்கலாம். என்றார்.

ஈஷா  மையத்தில் இருந்து அழைக்கப்பட்டவர்கள் முதல் வரிசையில் இருந்தோம். மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், எல்.முருகன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, புதுச்சேரி மந்திரிகள் எல்லோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்துபேசினேன். பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருவது நல்லது தான். அதனால் தமிழ்நாட்டிற்கு நல்லது நடந்தால் வரவேற்போம். பிரதமர் வருவது தவறு இல்லை. அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.

[youtube-feed feed=1]