சென்னை,

பொது நிகழ்ச்சி மன்றும் தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிய பயன்படுத்தக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் மீண்டும் தடை விதித்துள்ளது.

கூட்பு வடிவ ஒலிப்பெருக்கிகளால், ஒலி மாசு ஏற்படுதாவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு தனிநபர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், வழிபாட்டுத் தலங்கள், பொது நிகழ்ச்சிகளில் அதிக ஒலிகளை ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலி பெருக்கியைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக ஒலி மாசு ஏற்படுகிறது.

ஆகவே, கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதைத் தடுக்கும் விதமாக, கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் தேதி உச்சநீதி மன்றம் விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழக காவல் துறையினர் பின்பற்றுவதில்லை என்று கூறியிருந்தார்.

இதுகுறித்த வழக்கில்,  தமிழக அரசு அரசாணை வெளியிட உத்தரவிடுகிறோம் என்று கடநத 2016ம் ஆண்டே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, மீண்டும் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில்,  பொது, தனியார் நிகழ்ச்சிகளில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.