கல்கத்தா:
ஆவணங்களையே பாதுகாக்க முடியாத மோடியால் நாட்டை எப்படி பாதுகாக்க முடியும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் கமிஷனும் விரைவில் தேர்தல் தேதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தேர்தல் காரணமாக பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மத்தா பானர்ஜியும், உலக மகிளிர் தினமான நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
நேற்று நடைபெற்ற , கொல்கத்தா ஸ்ரத்தானந்தா பூங்காவில் இருந்து எஸ்பிளனேடு வரை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மம்தா, பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா உரையாற்றினார்.
அப்போது, ‘புதிய இந்தியா, ஒருங்கிணைந்த இந்தியா, மற்றும் வலிமையான இந்தியா’ என்பதே முக்கிய நோக்கம் என்று கூறியவர், நாட்டின் ஆவணங்களையே காப்பாற்ற முடியாத மோடி அரசால் நாட்டின் பாதுகாப்பை எப்படி காப்பாற்ற முடியும் என்று அதிரடியாக கேள்வி எழுப்பினார்.
ரஃபேல் விவகாரத்தில் முதலில் ஆவணங்கள் திருடப்பட்டதாக கூறிய நிலையில், பின்னர் ஜெராக்ஸ் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு மாற்றி மாற்றி பேசியதை குறிப்பிட்டு கடுமையாக விளாசினார்.