சென்னை: பொறியியல் படிப்பில் 2வது ஆண்டு நேரடியாக சேர தகுதியுள்ளவர்கள் 10ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற தொழிற்கல்வி பயின்றவர்கள் மற்றும் கலைக்கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் படிக்க விரும்பினார், அவர்கள் நேரடியாக 2வது ஆண்டியில் சேரலாம். அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுஉள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தகுதிவாய்ந்த டிப்ளமோ படிப்பு மற்றும் பி.எஸ்.சி. பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள் நேரடியாக 2-வது ஆண்டு பொறியியல் படிப்புகளில் 2021–22-ம் கல்வியாண்டுகளில் அரசு, அரசு உதவிபெறும், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 10ந்தேதி முதல் 30ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlea.com, www.accet.co.in, www.accetedu.in என்ற இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். 04565–230801, 224528 என்ற தொலைபேசி எண்களிலும் மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இந்த கல்வியாண்டுக்கான பி.இ., பி.டெக். 2-ம் ஆண்டு பட்டப்படிப்புக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படும்.

அதேபோல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு வருகிற 11ந்தேதி முதல் 31ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. விண்ணப்பதாரர்கள் www.gct.ac.in, www.tn–mbamca.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை 0422–2451100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதுதவிர, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பகுதிநேர பி.இ., பி.டெக் பட்டப்படிப்புகளுக்கு 6ந்தேதி(இன்று) முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 5ந்தேதி வரை www.ptbe-tnea.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு 0422–2574071, 2574072 என்ற எண்களில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.