ஒரு பெற்றோர் செய்யும் முக்கியக் கடமை தமது குழந்தைகளை தினமும் சரியான நேரத்தில் பள்ளியில் கொண்டு விடுவதும். பிறகு மாலையில் பத்திரமாகத் திருப்பி அழைத்து வருவதாகும். முன்னாள் பிரதமர் கேமரூனும் அதைத்தான் தனது முதல் நாளில் செய்தார்.
நன்றி: Steve Parsons/PA Wire
அவர் வியாழக்கிழமை ஒரு நீலநிற சட்டை மற்றும் சாதாரண ஜாக்கெட், ஸ்மார்ட் ஜீன்ஸ் மற்றும் கருப்பு காலணி அணிந்திருந்தார்.
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின் டவுனிங் தெரு எண் 10 வீட்டைக் காலி செய்வதில் செலவிட்டார். பின்னர், அவர் லண்டன் நாட்டிங் ஹில்லில் உள்ள மரங்கள் நிறைந்த தெருவில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் குடிபுகுந்தார்.
தனது தினசரி வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் , முதல் வேலையாய், தமது குழந்தைகளைப் பள்ளியில் இறக்கிவிட்டார்.
பின்னர், முன்னாள் கன்சர்வேடிவ் தலைவர் அலுவலகத்தில் அவரது வலது கரமாய் விளங்கிய ஜார்ஜ் ஆஸ்போர்னுடன் காபி அருந்தினார்.
முன்னாள் பிரதமரானவுடன், திரு கேமரூன் பங்கு பெற்ற முதல் அலுவல் பணி ஒரு துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் கொலையுண்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டதாகும். பிசி. பியோனா போன், 32, மற்றும் பிசி. நிக்கோலா ஹக்ஸ், 23 போலீஸ் நினைவு அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
கிரேட்டர் மான்செஸ்டர் ஹேட்டெர்ஸ்லேயில் உள்ள ஒரு வீட்டில் ஒரு கொள்ளை நடப்பதாக வந்த ஒரு போலி 999 அழைப்பினை அடுத்து அங்கு சென்ற இரண்டு போலிஸ்காரர்களும் ஒரு தேடப்படும் குற்றவாளி டேல் க்ரேகனால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய திரு கேமரூன் “நான் கடைசி முறையாக 10, டவுனிங் தெரு வெளியே நேற்று இரவு பேசும் போது நம் நாட்டில் குறிப்பாக நமது போலீஸ், நமது புலனாய்வு, நமது ஆயுத படைகள் சேவை அசாதாரண நெறிமுறைகளினைப் பற்றி பேசியிருந்தேன். புதிய பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அவருக்காக இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.இங்கிலாந்து நாட்டின் பிரதமர் பணியாற்றியது என் வாழ்வின் “மிகப் பெரிய கவுரவம். விபத்தோ, பெருவெள்ளமோ, எவ்வளவு மோசமான சூழ்நிலையானாலும், போலிசார் கண்டிப்பாக உதவ ஓடோடி வருகின்றனர்.” எனக் குறிப்பிட்டார்.