லக்னோ: உ.பி.யில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வரும் நிலையில், உ.பி. முதல்வர் யோகி என்னை கொல்ல நினைக்கிறார் என தேர்தல் ஆணையத்திடம் பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்ப பாதுகாப்பு கோரியுள்ளார். தான், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், பாஜக குண்டர்கள் என்னைத் தாக்கினார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
403 உறுப்பினர்களை கொண்ட உ.பி. ம்மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 2 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்னும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள யோகி தலைமையிலான பாஜகவும் போராடி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணியாற்றி வருகிறது. இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி, யோகி அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தனது கட்சிக்கு அழைத்து வந்து, யோகிக்கு பயத்தை காட்டி உள்ளது.
இந்த நிலையில், பாரதிய சமாஜ் கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், தன்னை யோகி கொல்ல விரும்புவதாக குற்றம் சுமத்தி உள்ளார். இவர் தற்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து வாரணாசியின் சிவ்பூர் சட்டப்பேரவை தொகுதியில் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி சார்பில் அரவிந்த் ராஜ்பர் போட்டியிடுகிறார்.
இவர் திங்கட்கிழமையன்று அரவிந்த் ராஜ்பர் தனது கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பருடன் சென்று அந்த தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனு தாக்குதல் செய்துவிட்டு திரும்பியபோது மர்ம நபர்களால் தாக்க முயற்சிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய ஓம் பிரகாஷ் ராஜ்பர். யோகி ஜி என்னை கொல்ல விரும்புகிறார் என கீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். பா.ஜ.க. மற்றும் யோகியின் குண்டர்கள் கருப்பு கோட் அணிந்து என்னை தாக்குவதற்காக அனுப்பப்பட்னர் என்று கூறியதுடன் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள மனுவில், யோகி தலைமையிலான பாஜக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துளதுடன், முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னை படுகொலை செய்ய விரும்புவதாக ராஜ்பார் கூறியுள்ளார். ஓம்பிரகாஷ் ராஜ்பர் தனக்கும், தனது மகன் அரவிந்த் ராஜ்பருக்கும் தேர்தல் ஆணையத்திடம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.