சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7ந்தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், வரும் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர, அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.. அதிமுக டிவிட்டர் பக்கத்தில் வெளியான, அழைப்பு தொடர்பான டிவிட் டெலிட் செய்யப்பட்டு உள்ளது.
அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருவதால், அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவிபார்கள் என கட்சியின் துணை ஒருங்கிணைப்பானர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
இதையடுத்து, இன்று திடீரென அ.தி.மு.க. எம்எல்ஏ-க்கள் அனைவரும், அக்டோபர் 6-ஆம் தேதி சென்னை தலைமைக்கழகம் வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டது.
தற்போது, திடீரென அந்த தகவல் நீக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கட்சித்தலைமை இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
முதல்வர் பதவி எடப்பாடிக்கு என்றால், கட்சித் தலைமை பதவி தன்னிடம் தன்னிசையாக தரப்பட வேண்டும் என ஓபிஎஸ் பிடிவாதம் பிடிப்பதால், 7 ந்தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. ஆனால், அக்டோபர் 7-ம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை நடத்தியே தீரவேண்டும் என்பதில் இபிஎஸ் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்றால், இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் கையொப்பம் இட்டு அறிக்கை விடவேண்டும். மாவட்டச் செயலாளர்களை அழைக்க வேண்டும் என்றாலும்கூட, இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இணைந்து முடிவெடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்களைப் பொறுத்தவரை, சட்டமன்றக் கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் இபிஎஸ் நேரடியாக அழைக்கலாம்.
அதன்படி, அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தலைமைக் கழகத்தில் இருந்து போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 6-ம் தேதியே சென்னைக்கு வந்துவிடும்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதா ககூறப்படுகிறது.
அதிமுக ஐடி பிரிவு தெரியாத்தனமாக டிவிட்டரில் பதிவிட்டுவிட்டதாகவும், அதை உடனே நீக்குவதற்கு தலைவர்கள் அறிவுறுத்தியதால், அது அகற்றப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே ஓபிஎஸ், தனது சொந்த மாவட்டமான தேனிக்கு கிளம்புவதாக தகவல்கள் பரவி வருகின்றன. கட்சியின் அறிவிப்பு என்றதால், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து அறிவிக்க வேண்டும் என்பதால், அதை தவிர்க்க, ஓபிஎஸ், முன்னதாகவே தனது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும், இதனால், அதிமுக மீண்டும் இரண்டாவது உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.