புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியின் சார்பாக, ரூ.5.93 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கைக் கட்டுப்பாட்டு அதிகாரி கண்டறிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதாவது, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களின் கூட்டுறவு சங்கத்திற்காக, ரூ.5.93 கோடி பணம் திருப்பி விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் குற்றம் சாட்டப்படுவதாவது; நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, அமைச்சர் ஸ்மிருதி இராணியின் தரப்பில் தவறான முறையில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
எனவே, மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். ரூ.5.93 கோடி பணத்தை, டெண்டர் எதையும் அறிவிக்காமலேயே, தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தன்னிச்சையாக ஒதுக்கியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி