டெல்லி: மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ம் தேதி காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை முதல் அமர்வாக நடக்கிறது. அதன் பின்னர் மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை 2ம் அமர்வாகவும் நடைபெறுகிறது.
இந் நிலையில் காணொளி வாயிலாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் வரும் 10ம் தேதி பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி நிலை, தொடரும் விவசாயிகள் போராட்டம், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நீடிக்கும் அமளி ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
Patrikai.com official YouTube Channel