சென்னை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு நடக்க உள்ள இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்ட மசோதாவை இறுதி செய்து ஒப்புதல் அளிக்கவும், புதிய முதலீடுகளுக்கு அனுமதி மற்றும் சலுகைகள் அளிப்பது ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளது.

வரும் அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்குமுன் ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு, பின்னர் அதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டு, அச்சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.