டில்லி:
வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கு தடை விதிக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சட்ட திருத்த மசோதா விரைவில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குழந்தைப்பேறு இல்லாத தம்பதியருக்கு சில பெண்கள் வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்று தருகிறார்கள். ஆனால், தற்போது சிலர் பணத்துக்காகவே இந்த பணியை செய்து தருவதாக புகார்கள் எழுந்தன. இது தொர்பாக எழுந்த புகாரின் பேரில் மத்தியஅரசின் சுகாதாரத்துறை, நாடு முழுவதும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டது. அதில், சுமார் 2,000 மருத்துவமனை கள் அனுமதி இல்லாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து மோசடி செய்து வருவது தெரிய வந்தது. கடந்த ஆண்டு ஐதராபாத்தில் வாடகை தாய்மார்கள் மூலம் குழந்தைபெற்று மோசடியில் ஈடுபட்ட மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வணிக ரீதியிலான வாடகைத்தாய் முறைக்கான தடை விதிக்கும் மசோதா கொண்டு வர மத்தியஅரசு தீர்மானித்து உள்ளது.
மசோதாவில், வாடகை தாயாக இருக்க, சம்பந்தப்பட்ட நபரின் நெருங்கிய உறவினர்கள் இருக்க வேண்டும் என்று இம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று ஒப்புதல் அளித்தது. இதனால், மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
அதுபோல, நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
[youtube-feed feed=1]