எர்ணாகுளம்:
மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற போராட் டத்தில் கலந்துகொண்ட, நார்வே நாட்டு பெண்ணை, உடனே நாட்டை விட்டு வெளியேறி இந்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. விசா விதியை மீறியதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 23ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்தில், நார்வே சுற்றுலா பயணியான ஜேன் மெட் ஜோகான்சன் என்பவரும் கலந்து கொண்டார். அவர் தனது கண்டன பதாகையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம் ஊடகங்களில் வெளியானது.
இதுகுறித்து விசாரணை நடத்திய இந்திய வெளியுறவுத்துறை, ஜேன் மெட் ஜோகான்சன் விசா விதிகளை மீறி விட்டதாக குற்றம்சாட்டி, அவரை நாட்டை விட்டு உடனே வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.