சென்னை:
புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில், மாபெரும் கண்டனப் பேரணி வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. இந்த கண்டனப் பேரணியில் கலந்துகொள்ள நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு திமு.க. தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த நிலையில்,. திமுக நடத்தும் பேரணியில் ம.நீ.ம பங்கேற்காது என்று கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.
மோடி தலைமையிலான பாஜகஅரசு சமீபத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல் படுத்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இஸ்லாமியர்கள் சட்டத்துக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராகப் போராட்டடம் நடத்துவதாக தெரிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று தெரிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக கட்சி சார்பில் நடிகர்கள் உள்பட பல அமைப்புகளுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், திமுக நிர்வாகிகள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்தும் போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
இந்j நிலையில், இன்று, கமல்ஹாசன், குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் ம.நீ.ம பங்கேற்காது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திமுக பேரணியில் பங்கேற்க இயலாத காரணத்தை ஸ்டாலினிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விளக்கியதாகவும் கூறப்படுகிறது.