சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஜார்க்கண்ட் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக கடந்த நவம்பர் 13ம் தேதி, 43 தொகுதிகளுக்கும் தொடர்ந்து 2வது கட்டமாக, நவம்பர் 20ம் தேதி 38 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின்படி, இங்கு இந்தியா கூட்டணி வெற்றி பெற்ருள்ளது. அதாவத் 81 தொகுதிகளில் 56 தொகுதிகளில் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் இடம்பெற்றுள்ள இந்தியா கூட்டணி அபார வெற்றிபெற்று. ஜார்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சியை தக்க வைத்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,
“ஜார்க்கண்ட் மாநிலத்தில் அனைத்துத் தடைகளையும் கடந்து வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கும், நமது இந்தியா கூட்டணிக்கும் எனது வாழ்த்துகள்.
அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் மற்றும் பல தடைகளைக் கடந்த 5 ஆண்டுகளில் பாஜக உருவாக்கினாலும், அத்தனையையும் துணிச்சலுடனும் உறுதியுடனும் எதிர்த்து நின்று ஹேமந்த் சோரன் வென்றுள்ளார்.
அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அவரது தலைமையில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை ஜார்க்கண்ட் மக்கள் தேர்தல் முடிவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர். இது மக்களாட்சிக்கும் மதச்சார்பின்மைக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றி”
என வாழ்த்துக்களை தெரிவித்துள்ள்ளார்.