சேலம்:
ணக்கு தணிக்கையாளர் எனப்படும் சார்ட்டட் அக்கவுன்ட் (சிஏ) தேர்வு அகில இந்திய அளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது. 4 வருட படிப்பான இது ஐஏஎஸ் தேர்வு அளவுக்கு கடினமான தேர்வாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

சிஏ தேர்வில் முதலிடம் பிடித்த ஸ்ரீராம்
                                   சிஏ தேர்வில் முதலிடம் பிடித்த ஸ்ரீராம்

கடந்த வருடம் நடைபெற்ற சிஏ தேர்வில் அகில இந்திய அளவில்  சென்னையை சேர்ந்த ஜான் பிரிட்டோ   என்பவர் முதலிடத்தை பிடித்தார். தற்போது இந்த வருடம் நடைபெற்ற தேர்வில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஶ்ரீராம் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து இரண்டு வருடங்களாக தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிஏ தேர்வில் முதலிடம் வருவது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமையாகும்.
இதகுறித்து ஶ்ரீராம்: எனது அப்பா, அம்மா, குடும்ப நண்பர்கள், நூலக அலுவலர்கள் கொடுத்த ஊக்கத்தால் என்னால் சிறப்பாக படிக்க முடிந்தது.
ஒரு நாளைக்கு குறைந்தது 2 மணி நேரம் தவறாமல் படிப்பதாகவும், சிறு வயதிலிருந்தே சிஏ படிக்க வேண்டும் என்பது என கனவு என்றும் கூறினார்.
2012ம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்தவுடன் சி.ஏ படிப்புக்காக என்னை தயார் படுத்த ஆரம்பித்து விட்டேன். முதல் வருடம்  சி.ஏ தேர்வில் 180/200 மார்க்கும், 2013-ல் சி.ஏ இன்டர் தேர்வில் 551/700 மார்க்கும், 2014-ல் சி.எஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடமும், தற்போது இறுதி தேர்வில் 613 மதிப்பெண்களுடன் தேசிய அளவில் முதலிடமும் பிடித்திருக்கிறார்.
சி.ஏ படிப்பை  வெறும் படிப்பாக அணுகாமல்,  அதை பயிற்சியாக எண்ணினால்  கண்டிப்பாக வெற்றி பெற முடியம் என்றார்.