ஆலப்புழா
பரிசோதனை நிலையத்தில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள போதிலும் முகக் கவசம் அணிந்ததால் 2123 பேர் தப்பி உள்ளனர்.
கடந்த மாதம் மிசோரியில் ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் இரு ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளன்ர். அவர்களிடம் 140 பேர் முடிதிருத்தி உள்ளனர். இவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தபபட்டு சோதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதற்கு அந்த இருவரும் முக கவசம் அணிந்ததே காரணம் எனத் தெரிய வந்தது.
இதைப் போல் தற்போது கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஆனால் இது பெரிய அளவில் நடந்துள்ளது
ஆலப்புழையில் உள்ள ஆரியாத் பிளாக் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ள பரிசோதனை நிலையம் ஒன்றில் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பரிசோதனை நிலையத்துக்கு 2123 பேர் வருகை தந்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர். இவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் நிலவியது.
இவர்களுக்கு நடந்த பரிசோதனையில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இங்கு வந்தவர்கள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நால்வர் ஆகிய அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்ததே ஆகும் எனக் தெரிய வந்துள்ளது.