டில்லி
இன்று நாடெங்கும் 54 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் 94 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அத்துடன் நாடெங்கும் 10 மாநிலங்களில் 54 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் வாரியான தொகுதி எண்ணிக்கை விவரம் வருமாறு
மத்தியப் பிரதேசம் – 28 தொகுதிகள்
குஜராத் – 8 தொகுதிகள்
உத்தரப்பிரதேசம் – 7 தொகுதிகள்
ஒரிசா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்ட் – தலா 2 தொகுதிகள்
சத்தீஸ்கர், தெலுங்கானா, அரியானா – தலா ஒரு தொகுதி
இந்த தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துக் கொண்டு உள்ளது