டில்லி:
உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பாஜக 6 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 2 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 தொகுதி யிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும், அப்னாதள் 1 தொகுதியிலும்முன்னிலை வகித்து வருகிறது.
அதுபோல குஜராத்தில் நடைபெற்ற 6 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 3 இடங்களில் காங்கிரஸ் கட்சியும், 3 இடங்களில் பாஜகவும் முன்னிலை வகிக்கின்றனர்.
உத்தரப்பிரதேசம், குஜராத், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 18 மாநிலங்களில்51 சட்டப்பேரவை தொகுதி களுக்கும் 2 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 21ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
உ.பி. மாநிலத்தில் 11 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், கங்கோக்க தொகுதியில் பாஜகவின் கிராத் சிங்ஐ எதிர்த்து போட்டியிட்டகாங்கிரஸ் வேட்பாளர் நூமன் மசூத் 320 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
இக்லாஸ் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் அபேகுமார், பாஜகவின் ராஜ்குமார் சாஹியோகியின் வாக்குகளை விட 3,841 வாக்குகள் அதிகம் பெற்றுமுன்னிலை வகிக்கிறார்.
லக்னோ கான்டில், பாஜகவின் சுரேஷ் சந்திர திவாரி 1,032 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.சைத்பூரில், எஸ்பியின் கௌரவ்குமார், பாஜகவின் அம்பிரிஷ்ஐ விட3500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 7 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
குஜராத்தில் 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 3 தொகுதிகளிலும் பாஜகவும் முன்னிலை வகித்து வருகிறது.
அசாம் மாநிலத்தில் நடைபெற்ற4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 3 இடங்களிலும், ஏஐயுடிஎப் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
சத்திஸ்கர் மாநிலத்தில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. பாஜக வேட்பாளர் ஆனந்த் சுக்லா 774 வாக்குகள் கூடுதல் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. தர்மசாலா தொகுதியில் பாஜக வேட்பாளர் விஷால் நேக்ரியா 1187 வாக்குகள் வித்தியாசத்திலும், பேச்சாட் தொகுதியில் பாஜக வேட்பாளர் 1543 வாக்குகள் முன்னிலையும் பெற்றுள்ளார்.