டெல்லி:
உலகளவில் முஸ்லிம்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். 2050ம் ஆண்டில் உலகளவில் அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்று அமெரிக்காவில் திங்க் டேங்க் பெவ் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் இந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தற்போது உலகளவில் கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்ததாக இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் உள்ளது. வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் முஸ்லிம் பெரிய மதமாகும். தற்போதுள்ள நிலை நீடித்தால் இந்த நூற்றாண்டின் இறுதியில் கிறிஸ்தவ மக்கள் தொகையை முஸ்லிம் மக்கள் தொகை மிஞ்சிவிடும்.
2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1.6 பில்லியன் முஸ்லிம்கள் இருந்தனர். உலகளவில் இது தோராயமாக 23 சதவீதமாகும். தற்போது அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தோனேசியா உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 35 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று 2015ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் மக்கள் தொகை மட்டும் 73 சதவீதம் வளர்ச்சி அடையும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், ‘‘2050ம் ஆண்டில் 2.8 பில்லியன் முஸ்லிம்கள் உலகளவில் இருப்பார்கள். உலகளவில் இதர மத ம க்கள் தொகையை விட முஸ்லிம் மக்கள் தொகை அதிக வளர்ச்சி அடைந்து வருகிறது. முஸ்லிம் மக்களின் இன பெருக்கம் மற்றும் குடியேறுதல் போன்றவை காரணமாக தான் ஐஎஸ்ஐஎஸ் மீதான தாக்கம் அதிகரித்து வருகிறது.
முஸ்லிம் மதத்தின் பெயரால் நடக்கும் இதர அமைப்புகளின் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக பல நாடுகளில் அரசியலில் முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சில இடங்களில் முஸ்லிம்கள் நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். குறைந்த எண்ணி க்கையில் வாழும் முஸ்லிம் அமெரிக்கர்கள் மத்தியல் இஸ்லாம் குறித்த விழிப்புணர்வு சிறிதளவு தான் உள்ளது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘‘உலகளவில் 62 சதவீத முஸ்லிம்கள் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வசிக்கின்றனர். இதில் இந்தோனேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான், துருக்கி ஆகிய நாடுகள் அடங்கும். இந்தியாவில் 2050ம் ஆண்டில் 300 மில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம் ம க்கள் இருப்பார்கள்.
ஐரோப்பாவிலும் முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டில் ஐரேப்பியர்களில் 10 சதவீதம் பேர் முஸ்லிம்களாக இருப்பார்கள். லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபீயன் தவிர இதர பகுதிகளில் தான் முஸ்லிம் மக்கள் தொகையின் வளர்ச்சி இருக்கிறது’’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், உலகளவில் மிகப்பெரிய மதமாக முஸ்லிம் இருக்கும் என்று கடந்த 2015ம் ஆண்டிலேயே இந்த மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.