அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ், பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் வரை  அரசு மானியம் அளிக்கிறது.

இதற்காக விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்வோம்.

இத்திட்டத்தின் கீழ் ரூ. 25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் ஐம்பது சதவிகிதம்.. எது குறைவோ அத்தொகை மானியமாக அளிக்கப்படும்.

125 சிசி திறன் வரை கொண்ட இருசக்கரக்க வாகனம் வாங்கலாம்.

யாருக்கு தகுதி?

அமைப்பு சார்ந்த, சாராத பணி புரிவோர், வர்த்தக நிறுவனம், அரசு, தனியார் துரையில் பணிபுரவோர்,  சொந்தத் தொழில் செய்வோர், அரசுத் திட்டங்களில் பணிபுரிவோர், கிராம வறுமை ஒழிப்பு குழுவில் பணி புரிவோர் இந்த மானியம் பெற தகுதி உள்ளவர்கள்.

ஆண்டு வருமானம் இரண்டரை லட்ச ரூபாய் வரை இருக்கலாம். அதற்கு மேல் என்றால் தகுதி இல்லை.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள்.. வாகனம் ஓட்டும் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும்.

பின்தங்கிய பகுதி, மலைப்பகுதியில் வாழும் பெண்கள்,  மாற்றுத்திறனாளி பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், 35 வயதாகி திருமணம் ஆகாத பெண்கள்  ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கோட்ட  அலுவலகம், நகர்ப்பற உள்ளாட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலங்களில் விண்ணப்பம் இலவசமாக  வரும் 22ம் தேதி முதல் கிடைக்கும்.

பிப் 5க்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.

இத்துடன், வயது சான்றிதழ், இருப்பிட சான்றிதழ்,  வருமான சான்றிதழ், வேலையின் தன்மை குறித்த சான்றிதழ்,

ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ்,

ஓட்டுநர் லைசன்ஸ், வேலையின் தன்மை குறித்த சான்றிதழ் ஆகியற்றை இணைக்க வேண்டும். மேலும் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் இணைக்க வேண்டும்.

தெரிந்துகொண்டீர்களா… இருசக்கர வாகனத்தக்கு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.. வாழ்த்துகள்!