டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு தொழிலதிபர்கள் தான் கடவுள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: மத்திய பட்ஜெட்டில் ராணுவ வீரர்களின் ஓய்வூதியம் குறைக்கப்படுகிறது. இளைஞர்கள், விவசாயிகள் நலன் ஆகிய இரண்டும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி அரசுக்கு உள்ள மூன்று – நான்கு தொழிலதிபர் நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு கடவுளாக தெரிகின்றனர் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் மத்திய பட்ஜெட் உரையின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் என்ற வார்த்தையை ஆறு முறையும், கார்ப்பரேட்டுகள், நிறுவனங்கள் என்ற வார்த்தையை 17 முறையும் பயன்படுத்தியுள்ளார் என்று குறிப்பிட்டு உள்ளார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு மற்றும் சீனா என்ற வார்த்தையை ஒருமுறை கூட பயன்படுத்தவில்லை என்று கூறி உள்ளார்.