சென்னை:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மதியம் 2.30 மணி முதல் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன.

முன்னதாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு சென்ற பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பிறகே பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
144 ஊரங்கு உத்தரவு காரணமாக மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி, மதுரை இன்று காலை முதலே, குறைந்த தூரம் கொண்ட ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டது
சென்னை மாநகர பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மட்டும் மாலை 6 பிறகும் சில பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]