
சென்னை:
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின், வைகோ, கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இந்த கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ், மதிமுக உள்பட கூட்டணி கட்சியினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்;தலைமையில் நடைப்பெற்றது.
அதேபோல் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக மகளிரணிச் செயலர் கனிமொழி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரத்தில் நடைப்பெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார்.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் போராட்டம் நடைப்பெற்று வருகிறது
சென்னை பாரிமுனையில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில், பேசிய வைகோ, ஆளுநரின் ஆய்வுக்கு அதிகாரிகள் செல்லக் கூடாது என்று தடுக்க அதிமுக அரசுக்கு துணிவுள்ளதா என்றும், நேருவுக்கே கருப்புக் கொடி காட்டிய கட்சி திமுக என்றும் அவர் பேசினார்.
[youtube-feed feed=1]