சென்னை:
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.
கட்டண உயர்வு குறித்த முழு விபரம்.
·மாநகரப் பேருந்துகளில் இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆக இருக்கும்.
· புறநகர் (வெளியூர்) பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ வரை ரூ.5 ஆக உள்ள கட்டணம் ரூ.6 ஆகிறது.
· 30 கி.மீ வரை ரூ.17 ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.24 ஆக அதிகரிக்கிறது. குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ-க்கான கட்டணம் 27 ரூபாயிலிருந்து ரூ.42ஆக ஆகிறது.
· அதிநவீன சொகுசுப் பேருந்தில் 30 கி.மீக்கு 21 ரூபாயிலிருந்து ரூ.33ஆக உயர்கிறது.
· மாநகரப் பேருந்தில் 20வது நிலைக்கு கட்டணம் ரூ.12லிருந்து ரூ.19 ஆக உயர்கிறது. அதே போல 28 நிலைகள் கொண்ட தொலைவிற்கு பேருந்து கட்டணம் 14 ரூபாயிலிருந்து 23 ரூபயாக அதிகரிக்கப்படுகிறது.
· அதி சொகுசு இடைநில்லா பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு 18 ரூபாயில் இருந்து ரூ.27ஆக உயர்கிறது.
· வோல்வோ பேருந்தில் கட்டணம் 30 கி.மீக்கு 33 ரூபாயில் இருந்து ரூ.51அக அதிகரிக்கிறது.
இந்த கட்டண உயர்வு இன்று சனிக்கிழமை முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.