சென்னை:

மிழகத்தில் நேற்று பெரும்பாலான கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. சென்னையிலும் பல கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்ட நிலையில், பச்சையப்பா கல்லூரி மாணவர்களின் ‘பஸ் டே’ அட்டூழியம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதை கண்டும் காணாதது போல தமிழக காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் மக்களிடையே காவல்துறையினர் மீதான நன்மதிப்பை மேலும் குலைத்துள்ளது.

ஏற்கனவே தமிழக காவல்துறை யினர் மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி நிலைவி வரும் நிலையில், உயர்நீதி மன்றத்தின் பல எச்சரிக்கை உத்தரவையும் மீறி பஸ் டே என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீர்குலைக்கும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுப்பது, கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது.

நேற்று நடைபெற்ற கீழ்ப்பாக்கம் பச்சையாபஸ் கல்லூரி மாணவர்களின் பஸ் கொண்டாடத்தின் போது, பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாலையில்,  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று திரண்டு, பஸ்சை கையக்ப்படுத்தி,  அலங்காரம் செய்தனர். பின்னர், பஸ் கூரை மீது ஏறி நின்றுகொண்டு கூச்சலிட்டு, பொதுமக்களை திசைதிருப்பியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் சத்தம் போட்டுக் கொண்டே வந்தனர்.

இதன் காரணமாக  அமிஞ்சிகரை  புல்லா அவென்யூ ரோட்டில் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதை பார்த்த டிராபிக் போலீசார்  மாணவர்களையோ, பஸ்சையோ நிறுத்தாமல் கண்டும் காணாததுபோல ஒதுக்கிக்கொண்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் ஆவேச மடைந்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் தொல்லை தாங்க முடியாமல் டிரைவர் சடர்ன் பிரேக் போட்டதால் பஸ் மீது ஏறி அமர்ந்திருந்த மாணவர்கள் சரிந்து கீழே விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு அதிகமான காயங்கள் ஏதும்  ஏற்படவில்லை.

பஸ் டிரைவர் பிரேட் அடித்த வேகத்தில் மீண்டும் பஸ்சை எடுத்திருந்தால், நேற்று பல மாணவர் கள் அந்த இடத்திலேயே பரிதாபமாக பரலோகம் அடைந்திருப்பார்கள்….

அதுபோல, சென்னை கடற்கரை சாலயில் உள்ள சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்களும், சென்னை பட்டாபிராம் முதல் அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்தில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து 20 மாணவர்கள் ஏறி வந்துள்ளனர்.

பேருந்து பாரதி சாலை அருகே வந்த போது எதிர் திசையில் கையில் மாலையுடன் வந்த மாணவர்கள் அரசுப் பேருந்திற்கு மாலை அணிவித்து பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 27 ஹெச் பேருந்திற்கு மாலை போட்டு பேனர் கட்டி தடையை மீறி மாணவர்கள் நடத்தி பஸ் டே கொண்டாட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேருந்தின் மீது ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பினர்.

எனினும் பாரதி சாலையில் இருந்து கண்ணகி சிலை நோக்கி வந்த மாணவர்கள் கத்தி ஆரவாரம் செய்தபடியே ஊர்வலமாக கல்லூரிக்கு சென்றனர். இதனால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தமிழகத்தில் பஸ் டே கொண்டாடத்திற்கு உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மதிக்காமல், மாணவர்கள்  பஸ் டே கொண்டாடியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அதே வேளையில் உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தும் தமிழக காவல்துறை, அதை கண்டு கொள்ளாமல் தூங்கிக்கொண்டிருக்கும் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அப்பாவிகளை ஹெல்மெட் இல்லை என்றும் மிரட்டி மாமுல் வாங்கும் காவல்துறையினர், இது போன்ற மக்கள் விரோத செயல்களை தடுக்க முயற்சிக்காதது ஏன்?

மாணவர்களின் போராட்டத்துக்கு பயந்து இதுபோன்ற அராஜகத்தை அனுமதிப்பதால்தான், மாணவர்களிடையே கத்தி கலாச்சசாரமும் தலை தூக்குகிறது. ஆரம்பத்திலேயே காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க தயங்கினால் மாணவர்களின் எதிர்காலமும் குட்டிச்சுவராகி விடும்….