அகமதாபாத்:
ங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா கோரிக்கையை ஏற்று அவர் விடுவிக்கப்படுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. அடுத்து நடைபெற உள்ள 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது அல்லது டிரா செய்வதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்குத் தகுதி பெறும். கடந்த 3 டெஸ்ட் போட்டிகளில் சென்னை, ஆமதாபாத் மைதானங்கள் அனைத்தும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்து வருகின்றன.

BCCI.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இருந்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளார் பும்ரா விடுவிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

4-வது டெஸ்டில் இந்திய அணியில் பும்ராவுக்கு பதிலாக உமேஷ் யாதவ் அல்லது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.